சீனாவின் 98 விழுக்காட்டு கிராமங்களில் 4ஜி சேவை இணைப்பு

2020-10-02 15:52:06
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தற்போது வரை, சீனா முழுவதிலும் 98 விழுக்காட்டுக்கும் அதிகமான கிராமங்களில் 4ஜி தொலைத்தொடர்புச் சேவை இணைக்கப்பட்டுள்ளது. மேலும், பதிவு செய்யப்பட்ட வறிய கிராமங்களில் 97 விழுக்காட்டுக் கிராமங்களிலும் பிராட்பேண்ட் சேவை கிடைத்துள்ளது என்று அண்மையில் சீனா மொபைல் நிறுவனத்தில் இருந்து வெளிவந்துள்ள தகவல் தெரிவிக்கின்றது.

2004ஆம் ஆண்டு முதல், சீனா மொபைல் நிறுவனம் 5,500 கோடி யுவான் ஒதுக்கீடு செய்து, ‘அனைத்து கிராமங்களிலும் சேவை இணைப்பு’ திட்டத்தையும், ‘தொலைத்தொடர்புச் சேவையின் பரவலுக்கான முன்னோட்டத் திட்டத்தையும் செயல்படுத்தி வந்துள்ளது. இதன் மூலம், 1.2லட்சம் கிராமங்களிலும் தொலைப்பேசி சேவை, 80ஆயிரம் கிராமங்ளிலும் பிராட்பேண்ட் சேவை இணைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்