முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்பு

மதியழகன் 2017-09-08 14:41:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் நேற்று வியாழக்கிழமை அதிகாப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை சுமூகமாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்வது ஒரு முன்னுரிமையாக இருக்கும் என்று அவர் செய்தி ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும்,பாதுகாப்புப் பொருட்கள் தயாரிப்பில், மேக் இன் இந்தியா என்ற தலைமை அமைச்சர் நரேந்திர மோடியின் முன்மொழிவு முக்கியமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் வரலாற்றில் 2ஆவது பெண் பாதுகாப்பு அமைச்சர் அதேநேரம் முதல் முழுநேர பெண் பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்