​வங்கதேச பாலத்தின் முதல் ஸ்பேன் - சீன பொறிஞர்கள் இணைப்பு

நிலானி 2017-10-01 16:10:46
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வங்கதேச பாலத்தின் முதல் ஸ்பேன் - சீன பொறிஞர்கள் இணைப்பு

வங்காளதேசத்தின் பத்மா பால கட்டுமானப் பணியில், இரண்டு தூண்களை இணைக்கும் முதலாவது ஸ்பேனை, சீனாவின் பிரதான பொறியியல் நிறுவன பொறிஞர்கள் சனிக்கிழமை வெற்றிகரமாகப் பொருத்தினர். அந்நாட்டு சாலை மற்றும் பாலங்கள் துறை அமைச்சர் ஒபைதுல் காதெர் உள்ளிட்டோர் முன் இந்தப் பணி நடைபெற்றது.

6.15 கிலோ மீட்டர் நீளமுடைய இப்பாலத்தில் மொத்தம் 41 ஸ்பேன்கள் பொருத்தப்படும். தற்போதுவரை, பாலத்தின் கட்டுமானப் பணியில் 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள ஸ்பேன்கள் பொருத்தும் பணி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வங்கதேசத்தின் நீண்ட பாலமான பத்மாவின் 37 மற்றும் 38 ஆவது தூண்களுக்கு இடையே, சீன பொறிஞர்கள் 2 மணி நேரம் செலவிட்டு இந்த ஸ்பேனை பொருத்தியுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்