சீனா தயாரிக்கும் சுரங்க தொடர்வண்டி பாகிஸ்தானுக்கு வருகை

நிலானி 2017-10-10 11:31:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனா தயாரிக்கும் சுரங்க தொடர்வண்டி பாகிஸ்தானுக்கு வருகை

சீனாவால் தயாரிக்கப்பட்ட சுரங்க தொடர்வண்டியின் ஒப்படைப்பு விழா அக்டோபர் 8ஆம் நாள் மாலை பாகிஸ்தானின் லாகூர் நகரில் நடைபெற்றது. சுரங்க இருப்புப்பாதை காலத்தில் பாகிஸ்தான் காலெடி எடுத்து வைத்துள்ளதை இது வெளிக்காட்டுகிறது.

சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதையின் மாதிரித் திட்டப்பணியான இந்தச் சுரங்க இருப்புப்பாதையில் ஓடக் கூடிய தொடர்வண்டிகள் சீன ச்சுசோ லோகோமேட்டிவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. லாகூர் ஆரஞ்சு நெறி சுரங்கப் பாதை என்ற இத்திட்டப்பணியின் மொத்த நீளம் 25.58கிலோமீட்டராகும். இதில் மொத்தம் 26 நிலையங்கள் உள்ளன. தொடர்வண்டியின் அதிகபட்ச வேகம் ஒரு மணிநேரத்துக்கு 80கிலோமீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்