சீன-இந்திய உறவின் வளர்ச்சியில் சீன தொழில் நிறுவனங்கள் பங்காற்ற வேண்டும் என விருப்பம்

2017-10-29 17:49:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய உறவின் வளர்ச்சியில் சீன தொழில் நிறுவனங்கள் பங்காற்ற வேண்டும் என விருப்பம்

சீன தொழில் நிறுவனங்களின் கூட்டம், சனிக்கிழமை 28ஆம் நாள் இந்தியாவின் கொல்கத்தாவிலுள்ள சீனத் துணை நிலை தூதரகத்தில் நடைபெற்றது.இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள 19 சீனத் தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்து கொணடனர்.

இக்கூட்டத்தில், இந்தத் துணை தூதரகத்தின் தலைவர் மாவ் ட்சான் வூ சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டை அறிமுகம் செய்ததோடு, இந்த மாநாடு சீனாவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்லாமல், உலகில் முக்கிய செல்வாக்கினை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.அவர் மேலும் பேசுகையில்

இந்தியாவின் கிழக்குப் பகுதியிலுள்ள சீனத் தொழில் முனைவோர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 19ஆவது தேசிய மாட்டின் முக்கிய குறிக்கோள்களைக் கற்றுக்கொண்டு, தத்தமது பணிகளைச் செவ்வனே செய்து, நிறுவனங்களின் தொலைநோக்கு வளர்ச்சிக்கு நல்ல அடிப்படையை உருவாக்க வேண்டும் என்றும், சீன-இந்திய உறவை மேம்படுத்தும் பங்கினை ஆற்ற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்