ஆப்கானிஸ்தானுக்கு அவசர உணவுப் பொருட்களின் உதவி

சரஸ்வதி 2017-10-30 14:53:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தானுக்கு சீன அரசின் முதலாவது தொகுதி உணவுப் பொருட்கள் உதவியின் ஒப்படைப்பு விழா 29ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் காபூலில் நடைபெற்றது. ஒப்படைப்பு படிவத்தில் இரு தரப்பினரும் கையொப்பமிட்டனர்.

அந்நாட்டிற்கான சீன தூதரகத்தின் தற்காலிகத் தூதர் சாங் ஷி சின், ஆப்கானிஸ்தானின் தேசிய பேரழிவு மேலாண்மை மற்றும் மனிதநேய விவகார அமைச்சகத்தின் தற்காலிக அமைச்சர் முகமது சாயஸ் இருவரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள வளரும் நாடுகளுக்கு, 200 கோடி யுவான் மதிப்புள்ள உணவுப் பொருட்களின் உதவியை சீனா வழங்கும் என்று இவ்வாண்டின் மே திங்கள், சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்ற கூட்டத்தில் சீனத் தரப்பு தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்