இலங்கை வெளியுறவு அமைச்சருடன் வாங்யாங் சந்திப்பு

நிலானி 2017-11-02 11:02:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கை வெளியுறவு அமைச்சருடன் வாங்யாங் சந்திப்பு

சீனத் துணை தலைமை அமைச்சர் வாங்யாங் நவம்பர் முதல் நாள் பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் திலக் ஜனக மரபனாவைச் சந்தித்துரையாடினார்.

இலங்கையுடனான உறவின் மீது சீனா பெரும் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளி இலங்கை என சீனா கருதுகிறது. இவ்வாண்டு அரிசி மற்றும் ரப்பர் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்ட 65ஆவது ஆண்டு நிறைவாகும். இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளுடன் ஒற்றுமையான ஒத்துழைப்பைச் சீனா வலுப்படுத்தும் என்று வாங்யாங் சந்திப்பின் போது தெரிவித்தார்.

21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்க இலங்கை விரும்புகிறது. இலங்கை-சீன உறவை மேலும் உயர்த்த எதிர்பார்த்துள்ளோம் என்று மரபனா கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்