பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு பலன்

பூங்கோதை 2017-11-07 09:34:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தானில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு பலன்

பாகிஸ்தானில் 2017இல் சமயம் தொடர்பான தாக்குதல்களின்எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதற்கு கடந்த 3 ஆண்டுகளாக, அரசின் பல்வேறுஅமைப்புகள் மேற்கொண்டு வரும் கடுமையான கொள்கைகள்தான் காரணம் என்று அரசு திங்கள்கிழமைவெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.உள்துறை அமைச்சகம் வெளியிட்டபுள்ளிவிபரங்களின்படி, கடந்த 7 ஆண்டுகளில், சமயம் தொடர்பான தீவிரவாதத் தாக்குதல்கள்676 நிகழ்ந்துள்ளன. இதில் 2012இல் 185 சம்பவங்கள் நிகழ்ந்தன. அதேசமயம், கடந்தஆண்டு 37 தாத்குதல்கள் நடத்தப்பட்டன இவ்வாண்டில் இதுவரை அத்தகைய நிகழ்வுகள் 2மட்டுமே நடந்துள்ளன.பாகிஸ்தானில் 2014இல் பள்ளியில் மீதுதீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 140 குழந்தைகள் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, தேசிய செயல் திட்டத்தை பாகிஸ்தான் அமல்படுத்தியது. இதன்மூலம்பரந்துபட்ட அளவில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இத்தாக்குதலுக்குப் பிறகு, 483 தூக்கு தண்டனைக் கைதிகளின் தண்டனைக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்ததடை நீக்கப்பட்டு, தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்