இந்தியச் சந்தையில் சியௌமி கைப்பேசி விற்பனை

2017-11-15 09:58:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச தரவு நிறுவனமான ஐ டி சி அண்மையில் வெளியிட்ட தகவல்களின்படி, இவ்வாண்டின் மூன்றாவது காலாண்டில், சீனாவின் சியௌமி நிறுவனம் இந்தியாவில் 92 இலட்சம் கைப்பேசிகளை விற்பனை செய்துள்ளது. இது, இந்தியச் சந்தை பங்கில் 23.5 விழுக்காட்டை எட்டி, இந்தியாவின் கைப்பேசி விற்பனையில் மிகப் பெரும் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்த விற்பனையில் ரெட் மி னொட் 4 எனும் கைப்பேசி 40 இலட்சம் என்னும் அளவை எட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரெட்மி 4 ரெட்மி 4 ஏ ஆகிய கைப்பேசிகள் இந்தியாவின் கைப்பேசி விற்பனையில் முதல் 5 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்