இந்தியத் தொழில் பூங்காவில் சீனத் தொழில் நிறுவனம்

2017-11-17 10:32:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியத் தொழில் பூங்காவில் சீனத் தொழில் நிறுவனம்

சீனாவின் ஹையர் குழுமம், இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தின் பூனே-ஓண்டல் நகரில் அமைந்துள்ள தனது தொழில் பூங்காவின் விரிவாக்கப் பகுதியின் துவக்க விழாவை 16ஆம்நாள் நடத்தியது. இந்தியாவில் முதலீடு செய்துள்ள சீனாவின் முதலாவது வீட்டுப் பயன்பாட்டு மின் சாதன தொழில் பூங்கா இதுவாகும்.

இந்தியத் தொழில் பூங்காவில் சீனத் தொழில் நிறுவனம்

தொடர்புடைய தரவுகளின்படி, இந்திய ஹையர் குளிர் சாதனப் பெட்டி உற்பத்தி அளவு 18 இலட்சத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது, நீர் சூடாக்கி, சலவை இயந்திரம், காற்றுப்பதனாக்கி, தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றுக்கு தலா 5 இலட்சம் உற்பத்தி மார்க்கம் என்று நிர்ணியிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இதில் புதிதாக 12 ஆயிரம் வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொழிற்சாலை நிர்வகித்த பிறகு, இங்கு உற்பத்தி செய்யப்படும் வீட்டுப்பயன்பாட்டு மின் சாதனங்கள், இந்தியாவின் தேவையை நிறைவேற்றும் அதேவேளையில், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கப் பிரதேசம் முதலியவற்றுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்