புது தில்லியில் சீன-இந்திய இளைஞர்கள் கொண்டாட்டம்

2017-11-18 16:21:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புது தில்லியில் சீன-இந்திய இளைஞர்கள் கொண்டாட்டம்

சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களிடையேயான கொண்டாட்ட நிகழ்ச்சி, நவம்பர் 17ஆம் நாளிரவு தில்லியிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது. இந்தியாவில் நட்புப் பயணம் மேற்கொண்டுள்ள சீன இளைஞர் பிரதிநிதிகள், இந்தியாவின் இளைஞர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புது தில்லியில் சீன-இந்திய இளைஞர்கள் கொண்டாட்டம்

சீனத் தூதர் லோவ் சாவ்ஹுய் கொண்டாட்டத்தில் உரை நிகழ்த்துகையில்

இளைஞர்களுக்கிடை பரிமாற்றமானது, இரு நாட்டுறவை வளர்ப்பதில் முக்கிய பகுதியாகும். 2006ஆம் ஆண்டு முதல் இது வரை சீன மற்றும் இந்திய இளைஞர் குழுக்கள், 10ஆவது முறையாக பயணம் மேற்கொண்டுள்ளன என்று தெரிவித்தார்.

எதிர்காலத்தில், இரு நாட்டு இளைஞர்களிடையே குறுகிய காலப் பரிமாற்றத் திட்டங்களை முன்னெடுக்கும் அதேசமயத்தில், இளைஞர்கள் கல்வி, மூத்த அறிஞர்களின் பயணம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வல்லூநர்களின் பரிமாற்றம் போன்ற நீண்டகால திட்டங்களில் முன்னேற்றம் பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புது தில்லியில் சீன-இந்திய இளைஞர்கள் கொண்டாட்டம்

நவம்பர் 15ஆம் நாள், சீன இளைஞர் பிரதிநிதிக் குழு 196பேருடன் புது தில்லியைச் சென்றடைந்து, இந்தியாவில் 8 நாள் நட்புப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்