சந்திர மண்டல ஆய்வில் இந்தியா ஐப்பான் ஒத்துழைப்பு

வாணி 2017-11-19 16:26:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒரு சந்திர மண்டல ஆய்வுத் திட்டம் பற்றி இந்தியாவும் ஜப்பானும் ஆராய்ந்து வருவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் கீரன் குமார் தெரிவித்துள்ளார்.

ஆசிய பசிபிக் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் மன்றத்தின் 24ஆவது கூட்டம் நவம்பர் 14ஆம் நாள் முதல் 17ம் நாள் வரை இந்தியாவின் பெங்களூரு நகரில் நடைபெற்றது. இதில் கீரன் குமார் கூறுகையில்,

ககூயா எனும் சந்திர மண்டலத்தைச் சுற்றி வரும் ஆய்வு செயற்கை கோளை ஜப்பான் 2007ஆம் ஆண்டு வெற்றிகரமாக செலுத்தியது. சந்திரயான்-1 எனும் சந்திரன் ஆய்வுக் கலத்தை இந்தியா 2008ஆம் ஆண்டு செலுத்தியது. எதிர்காலத்தில் சந்திரன் மண்டல ஆய்வில் கூட்டாக ஈடுபட, இரு நாடுகளின் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் தற்போது ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்தார்.

குறைவான செலவில் எப்படி தரமான பயன் பெறுவது என்பதை இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள  ஜப்பான் விரும்புகின்றது. ஜப்பானிடம் நிதியுதவி பெறுவது இந்தியாவின் விருப்பமாகும் என்று இந்திய செய்தி ஊடகம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்