கொல்கத்தாவில் கன்ஃயூசியஸ் வகுப்பு தொடக்க விழா

மதியழகன் 2017-11-29 14:29:05
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கொல்கத்தாவில் கன்ஃயூசியஸ் வகுப்பு தொடக்க விழா

கொல்கத்தாவிலுள்ள சீனத் துணைத் தூதரகம், உள்ளூர் சீன மொழிப் பள்ளியுடன் இணைந்து நவம்பர் 28ஆம் நாள் கன்ஃயூசியஸ் வகுப்பை தொடங்கி வைத்தது

இந்தியாவில் முதல் கன்ஃயூசியஸ் வகுப்பின் தொடக்கம், சீனாவுக்கும் இந்தியாவின் கிழக்குப் பகுதிக்கும் இடையேயான பரிமாற்றத் துறையில் பெரிய நிகழ்வாகும். தற்போது சீன-இந்திய பொருளதார மற்றும் மானுடவியல் பரிமாற்றப் போக்கிற்கு இது பொருத்தமாக உள்ளது என்று கொல்கத்தாவிலுள்ள சீனத் துணைத் தூதரகத் தலைவர் மா ட்சான்வூ தனது உரையில் தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொடர்பை அதிகரிக்க பாடுபடுவதோடு, கன்ஃயூசியஸ் வகுப்பு வெற்றிகரமாக நடந்து வருவதை மகிழ்ச்சியுடன் காண்கின்றேன் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கூறினார்.

இந்திய-சீன நட்புறவு மற்றும் பரிமாற்றத்தை மேம்படுத்துவதில் கன்பூசியஸ் வகுப்பு முக்கிய பங்கேற்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்