இலங்கையில் கடும் மழை

பூங்கோதை 2017-12-01 10:56:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கையில் கடும் மழை

இலங்கையில் நவம்பர் 29ஆம் நாளிரவு தொடங்கிய கடும் மழையின் காரணமாக, இதுவரை, 7 பேர் உயிரிழந்தனர். 23 பேர் காயமுற்றனர் என்று அந்நாட்டின் பேரிழவு மேலாண்மை மையம் 30ஆம் நாள் தெரிவித்தது.

இலங்கையில் கடும் மழை

நவம்பர் 30ஆம் நாள் அந்நாட்டின் தென் பகுதியிலுள்ள கல்லே மற்றும் அம்பணத் தொட்டம் நகர்களிலிருந்து கடலுக்குள் சென்ற 4 மீன்பிடிக்கப்பல்களின் தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டது. உள்ளூர் கடற்படையுடன் இணைந்து மீட்புப் பணியை மேற்கொள்ளத் துவங்கியுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், பல்வேறு இடங்களின் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மேற்கு மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடும் மழை

குறைவான காற்றழுத்தத்தின் பாதிப்பால், இலங்கையின் வட, தென் மற்றும் மேற்கு மாநிலங்களில், 100 மில்லிமீட்டருக்கு மேலான மழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்