சீன-இலங்கை அம்பந்தோட்டை துறைமுக ஒத்துழைப்புத் திட்டப்பணி துவக்கம்

வாணி 2017-12-10 15:31:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அம்பந்தோட்டை துறைமுக ஒத்துழைப்புத் திட்டப்பணி அதிகாரப்பூர்வமாகத் துவங்குவதாக இலங்கை அரசு 9ஆம் நாள் அறிவித்துள்ளது. இத்துறைமுகத்தின் இயங்கும் உரிமை கூட்டு முதலீடு என்ற முறையில் சீனாவின் சிஎம் போட் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே சனிக்கிழமை நடைபெற்ற தொடர்புடைய துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். சீனா நீண்டகாலமாக அம்பந்தோட்டை பிரதேசத்துக்கு வழங்கிய உதவிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், சிஎம் போட் நிறுவனத்தின் முதலீடு இலங்கை மக்களுக்கு நன்மை பயக்கும் என்றும், இரு தரப்புகளின் ஒத்துழைப்புடன் அம்பந்தோட்டை துறைமுகம் சீரான வளர்ச்சி பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அம்பந்தோட்டை துறைமுகம் இலங்கைக்கு தெற்கில் பன்னாட்டு கடல் வழி சரக்குப் போக்குவரத்து நெறிக்கு சுமார் 10 கடல் மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு ஆழ் நீர் பன்னோக்கு துறைமுகமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்