சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பில் கலந்து கொண்ட வாங்யீ

ஜெயா 2017-12-12 10:27:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பில் கலந்து கொண்ட வாங்யீ

சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர் சந்திப்பில் கலந்து கொண்ட வாங்யீ

இந்தியாவின் புதுதில்லியில், சீன-ரஷிய-இந்திய வெளியுறவு அமைச்சர்களின் 15ஆவது சந்திப்பில் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ 11ஆம் நாள் கலந்து கொண்டார்.

அவர் கூறுகையில், உலக பலதுருவமயமாக்கம் மற்றும் சர்வதேச உறவு ஜனநாயகமயமாக்கப் போக்கிற்கும், இந்த 3 நாடுகள் மற்றும் இப்பிரதேசத்துக்கும் மட்டுமல்ல, முழு உலகின் மொத்த நலனுக்கும், சீன-ரஷிய-இந்திய ஒத்துழைப்பு அமைப்பு முறையின் உருவாக்கம் பொருந்தியது என்று கூறினார். சீனா, ரஷியா, இந்தியா, 3 உயிர்ப்புடன் கூடிய ஆற்றல் வாய்ந்த புதிய வளரும் சந்தை நாடுகளாகும். இவை சர்வதேச நிலைமையின் மாற்றத்திற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்ற வேண்டும். தற்போதைய உலகின் நிதானமான, உறுதியான ஆற்றலாக மாற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவும், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் கூறுகையில், தற்போது சிக்கலான சர்வதேச நிலைமை நிலவுகிறது. பிரதேச மோதல், பொருளாதார வளர்ச்சி, பயங்கரவாத எதிர்ப்பு, காலநிலை மாற்றம், 2030ஆம் ஆண்டு தொடரவல்ல வளர்ச்சியை நனவாக்குவது முதலிய விவகாரங்கள் மற்றும் உலக விவகாரங்களில் சீனா, ரஷியா, இந்தியா ஆகிய 3 நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும் நியாயமான, ஜனநாயகமான சர்வதேச ஒழுங்கு முறையை உருவாக்குவதையும் முன்னேற்ற வேண்டும் என்று கூறினர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்