புது தில்லியில் ராம் நாத் கோவிந்த்- வாங் யீ சந்திப்பு

மதியழகன் 2017-12-12 14:40:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புது தில்லியில் ராம் நாத் கோவிந்த்- வாங் யீ சந்திப்பு

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயை, இந்திய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் மாளிகையில் 11ஆம் நாள் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.

சீனாவுடன் ஒன்றின் ஒன்று மீதான புரிந்துணர்வு மற்றும் நம்பிக்கையை அதிகரித்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டு ஒத்துழைப்பு உறவை புதிய நிலைக்கு முன்னெடுக்க இந்தியா விரும்புவதாக, கோவிந்த் சந்திப்பின்போது தெரிவித்தார்.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேய பரந்த அளவிலான பொது நலன்களும் பொதுவான நிலைப்பாடும் உண்டு. ஒத்துழைப்புக்கு உள்ளார்ந்த வாய்ப்புகள் அதிகம். ஒன்றுக்கொன்று ஆதரவை வலுப்படுத்தி, ஒன்றின் ஒன்று மீதான சந்தேகத்தைத் தவிர்க்க இரு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று வாங்யீ கூறினார்.

 

 

 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்