சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

பூங்கோதை 2017-12-12 15:31:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு

சீன-இந்திய-ரஷிய வெளியுறவு அமைச்சர்களின் 15வது பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அம்மையாரை டிசம்பர் 11ஆம் நாள் புது தில்லியில் சந்தித்துரையாடினார்.

சீன-இந்திய உறவு, முக்கிய கட்டத்தில் உள்ளது. ஒன்றுக்கொன்று நம்பிக்கை, இரு நாட்டுறவின் முக்கிய அம்சமாகும். இந்நிலையில், பல்வேறு நிலையான நெடுநோக்கு பரிமாற்றத்தை வலுப்படுத்தி, பேச்சுவார்த்தை அமைப்பு முறையை மீண்டும் துவக்கி, பல்வேறு துறைகளில் பயன்தரும் ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும். மேலும், இரு நாடுகளுக்கிடையிலான கருத்து வேற்றுமைகளை உரிய முறையில் கையாண்டு, எல்லை பகுதியிலுள்ள அமைதியைப் பேணிகாக்க வேண்டும் என்று வாங்யீ தெரிவித்தார்.

சுஸ்மா ஸ்வராஜ் பேசுகையில், சீனாவுடனான உறவுக்கு இந்தியா பெரும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இரு நாடுகளுக்கிடையிலான கருத்து வேற்றுமைகளை விட, பொது அம்சங்கள் மிக அதிகம் என்று இந்தியா கருதி வருகிறது. அதனால், இரு நாடுகளும் நெடுநோக்கு பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். சீனாவும் இந்தியாவும் கைகோர்த்துக்கொண்டு முயற்சி செய்தால், இந்த நூற்றாண்டு, ஆசியாவின் உடையதாக இருக்க முடியும் என்றார் அவர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்