துபை உலக சூப்பர்சீரிஸ் பாட்மிண்டன் – சிந்துவுக்கு வெள்ளி

வாணி 2017-12-18 09:41:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

துபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலக சூப்பர்சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில், ஜப்பானைச் சேர்ந்த யமகுச்சியிடம் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இதனால் இப்போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த ஆட்டத்தில் இரு  வீராங்கனைகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. போட்டியின் முதல் தர வரிசையில் இருந்த யமகுச்சியும், சிந்துவும் வெற்றிக்காக ஆட்டத்தின் இறுதிவரை போராடினர். முதல் செட்டில் 21-15 என்ற புள்ளிக் கணக்கில் சிந்துவும், 2ஆவது செட்டை 21-12 என்ற புள்ளிக் கணக்கில் யமகுச்சியும் வென்றனர். இதனால் மூன்றாவது செட்டுக்கான போராட்டம் கடைசி வரை நீடித்தது. இறுதியில் யமகுச்சி 21-19 என்ற புள்ளிக் கணக்கில் அதனை வென்று சாம்பின் பட்டத்தை தன்வசப்படுத்தினார்

ஹைதராபாதைச் சேர்ந்த சிந்து போட்டி குறித்து கூறுகையில், இது மிகவும் போராட்டமான சுற்று. வெற்றிக்கு மிக அருகே வரை சென்றேன் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்