சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்ட வெளியீட்டு விழா

கலைமணி 2017-12-19 15:52:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்ட வெளியீட்டு விழா

டிசம்பர் 18ஆம் நாள், சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்ட வெளியீட்டு விழா, பாகிஸ்தானில் நடைபெற்றது. பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் யாவ் ஜிங், பாகிஸ்தானின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சரும் உள்துறை அமைச்சருமான அசன் இக்பால் மற்றும் பாகிஸ்தானிலுள்ள சீன தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்ட வெளியீட்டு விழா

40 ஆண்டுகால சீர்திருத்த மற்றும் திறப்புப் பணியின் மூலம், உலகின் 2ஆவது பெரிய பொருளாதார நாடாக சீனா மாறியுள்ளது. சீனாவின் நண்பராக, பாகிஸ்தான் சீனாவின் வெற்றிகரமான அனுபவங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சரும் உள்துறை அமைச்சருமான அசன் இக்பால் தெரிவித்தார்.

சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை ஆக்கப்பணிக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவுக்கு பாகிஸ்தானுக்கான சீனத் தூதர் யாவ் ஜிங் பாராட்டு தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்