சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையை ஆப்கானிஸ்தான் வரை நீட்டிக்க வாய்ப்பு

வாணி 2017-12-27 10:41:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தானுடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் கோட்பாட்டின்படி, சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை ஆப்கானிஸ்தானுக்கு நீட்டிப்பதற்குரிய வாய்ப்பு பற்றி விவாதிக்க சீனாவும் பாகிஸ்தானும் விரும்ப்பம் தெரிவித்துள்ளன.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சலாஹுதின் ரப்பானி, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா அசீஃபு ஆகியோர் 26ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தனர்.

இது பற்றி சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ மேலும் கூறுகையில், சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை பொருளாதாரத் துறையில் ஒரு ஒத்துழைப்புத் திட்டப்பணியாகும். உரிமைப் பிரதேசம் பற்றிய சர்ச்சை உள்ளிட்ட இப்பிரதேசத்திலுள்ள மோதல்களுடன் தொடர்பு ஒன்றும் இல்லை. அவற்றுடன் தொடர்பு கொள்வதும் சரியல்ல என்று குறிப்பிட்டார்.

 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்