31 செயற்கைக் கோள்களைச் செலுத்தும் இந்தியாவின் திட்டம்

வாணி 2017-12-31 16:19:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

31 செயற்கைக் கோள்களைச் செலுத்தும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளதாக அகில இந்திய வானொலி அண்மையில் கூறியுள்ளது.

கடந்த ஆக்ஸ்ட் திங்கள் தோல்வியடைந்த செலுத்தலுக்குப் பிறகு, பிஎஸ்எல்வியின் முயற்சிப் பணி இதுவாகும். இந்த 31 செயற்கைக் கோள்களில் அமெரிக்கா, பின்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளின் 28 நானோ செயற்கைக் கோள்களுடன், இந்தியாவின் ஒரு மைக்ரோ, ஒரு நானோ செயற்கைக்கோள், காரோசாட் -2 தொகுதியைச் சேர்ந்த ஒரு புவியியல் கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகியவை விண்ணில் ஏவப்படும்.

ஜனவரி 10ஆம் நாள் அவை ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி நிலையத்திலிருந்து விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்