இலங்கை தலைவர்களின் புத்தாண்டு விருப்பம்

வாணி 2018-01-01 16:02:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பொருளாதாரத்தின் செழுமை நாட்டின் இணக்கம் ஆகியவற்றுக்காகவும், உலக மேடையில் இலங்கையின் தகுநிலையை உயர்த்துவதற்காகவும் தனது அரசு 2018ஆம் ஆண்டில் பாடுபடும் என்று இலங்கை அரசுத் தலைவர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டுக்கான புத்தாண்டுரையை அவர் ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்திய போது, 2017ஆம் ஆண்டு விடைபெற்று புதிய எதிர்பார்ப்புடன் புதிய ஆண்டை இலங்கை வரவேற்பதாக குறிப்பிட்டார்.

இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே தனது புத்தாண்டுரையில், கடந்த ஆண்டில், மாபெரும் அறைக்கூவல்களை எதிர்நோக்கிய போது, பொருளாதாரத் துறையின் நிதானத் தன்மையை இலங்கை நிலைநிறுத்தி, தொடரவல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை, மனிதர்களின் பெருமையை உணரந்து கொண்டு அதற்கு மதிப்பளிக்கும் நாடாக திகழ்கின்றது என்பதை உலகிற்கு நிரூபித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்