இந்திய-சீன பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் கருத்தரங்கு

நிலானி 2018-01-04 10:26:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய-சீன பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் கருத்தரங்கு

இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு இந்திய-சீன பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவது என்ற கருத்தரங்கை 3ஆம் நாள் புது தில்லியில் நடத்தியது. இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ச்சௌஹுய், சீன முன்னாள் துணை வெளியுறவு அமைச்சர் ஹூ யாஃபெய், இந்திய-சீன நட்புறவு நாடாளுமன்ற குழுத் தலைவர் தருண் விஜய்  ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

சீனா மற்றும் இந்தியாவின் ஒத்துழைப்பு, இரு நாட்டு பொருளாதாரத்தின் நிலையான வளர்ச்சிக்கும் உலகின் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கும் துணையாக இருக்கும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவை முன்னேற்றுவதில் இந்தியா சீனாவின் முக்கிய ஒத்துழைப்புக் கூட்டாளியாகும். இந்தியாவுக்கும் தொடர்புடைய திட்டங்களின் நனவாக்கத்தில் சீனாவின் ஒத்துழைப்ப்பு தேவைப்படுகிறது. பல்வேறு இன்னல்களைச் சமாளித்து இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்புகளை விரிவாக்க வேண்டும் என்று ஹூ யாஃபெய் இதில் உரையாடிய போது தெரிவித்தார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்