இந்து மா கடலில் துவங்கும் சீன-பாகிஸ்தான் அறிவியல் ஆய்வு

வான்மதி 2018-01-14 15:59:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்து மா கடலில் துவங்கும் சீன-பாகிஸ்தான் அறிவியல் ஆய்வு

வடக்கு இந்து மா கடலில் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான முதலாவது அறிவியல் ஆய்வு விரைவில் துவங்க உள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்கள் 8 பேர் கராச்சி துறைமுகத்தில் நிற்கும் சீன அறிவியல் கழகத்தின் ஷி யான்-3 எனும் அறிவியல் ஆய்வு கப்பலில் புறப்பட உள்ளனர்.

திட்டப்படி ஷி யான்-3 கப்பல் வட இந்து மா கடலிலுள்ள மேக்ரான் அகழிக்குச் செல்ல உள்ளது. கடல் சார் நிலவியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்டவை தொடர்பான பன்னோக்கு ஆய்வை இருநாட்டு அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்கள் இணைந்து மேற்கொள்வர்.

மேக்ரான் அகழியின் நிலவியல் அமைப்பு, அதன் சுற்றுப்புறத்தில் ஏற்படும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து, பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் குறைப்புக்கு அறிவியல் ஆதாரங்களை வழங்கும் அதேவேளையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் நெடுகிலுள்ள கட்டுமானத்துக்கும் சேவைபுரிவது என்பது நடப்பு அறிவியல் ஆய்வின் நோக்கமாகும் என்று தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்