நேபாளத்துக்கு சீனா 32000 ஒளி மின்சார உற்பத்தித் தகடு வழங்கல்

நிலானி 2018-01-22 10:45:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாளத்துக்கு சீனா 32000 ஒளி மின்சார உற்பத்தித் தகடு வழங்கல்

சீனா நேபாளத்துக்கு சுமார் 32000 சூரிய ஒளி மின்சார உற்பத்தித் தகடுகளை வழங்கும் விழா 21ஆம் நாள் காட்மாண்டில் நடைபெற்றது. நேபாள மக்கள் தொகை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் ராம் பிரசாத் லம்சால், நேபாளத்துக்கான சீனத் தூதரகத்தின் வணிக கவுன்சிலர் பொங்வேய் உள்ளிட்ட இரு தரப்பின் பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

லம்சால் உரைநிகழ்த்திய போது, சீனாவின் சுயநலமில்லா உதவிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார். தொடர்புடைய பகுதிகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக செழுமையை இத்தகடுகள் முன்னேற்ற முடியுமென நம்புவதாகவும் அவர் கூறினார். 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்