இந்தியாவின் நகரங்களில் ஓஃபோ சேவை

பண்டரிநாதன் 2018-01-24 10:18:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவின் நகரங்களில் ஓஃபோ சேவை

இந்தியாவின் நகரங்களில் ஓஃபோ சேவை

உலகின் முதலாவது நிறுத்தக் கம்பம் வசதியற்ற பகிர்வு மிதிவண்டி சேவையான ஓஃபோ, தனது சேவையை இந்தியாவின் நகரங்களில் அண்மையில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியது. ஏற்கெனவே, ஆமதாபாத், பெங்களூரூ, தில்லி, இந்தூர் மற்றும் சென்னை ஆகிய மாநகரங்களில் இச்சேவை முன்மாதிரியாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது, புணே மற்றும் கோவை மாநகரங்களில் இச்சேவைக்கான ஒப்பந்தத்தை உள்ளூர் அரசுகளுடன் இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்தியாவின் நகரங்களில் ஓஃபோ சேவை

இந்தியாவின் நகரங்களில் ஓஃபோ சேவை

கடந்த திங்கள்கிழமை தில்லியில் உள்ள மகளிர் கல்லூரியில் ஓஃபோ நிறுவனம் தனது முதலாவது சேவையைத் தொடங்கியது. நகர்ப்புறத்தில் மக்கள் தொகை பெருகி வருகிறது. நாளுக்கு நாள் நகரங்களை பொலிவுறு நகரங்களாக மாற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டப்பட்டு வருகிறது. அதனால் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துவதில் அரசு அதிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் பொதுப்போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவதையும் ஊக்குவிக்கப்படுகிறது.  இதற்கு ஓஃபோ பகிர்வு மிதிவண்டி சேவை உதவி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்