நேபாளத்தில் இந்திய வெளியுறவு அமைச்சரின் பயணம்

வாணி 2018-02-02 11:33:01
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வியாழன் அன்று காத்மாண்டு சென்றடைந்து இரண்டு நாள் பயணம் மேற்கொள்ள துவங்கினார்.

அவர் நேபாள அரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி மற்றும் தலைமை அமைச்சர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோருடன் இருதரப்புறவு பற்றி விவாதிப்பார்.

 இப்பயணம் பற்றி இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது,

இந்தியா மற்றும் நேபாள அரசியல் துறையில் வழமையான உயர் நிலை பரிமாற்றத்தையும், இடைவிடாமல் விரிவாகி வரும் இரு தரப்புக் கூட்டாளியுறவையும்,  பல்வேறு துறைகளிலும் ஒத்துழைப்புகளை மேற்கொள்வதில் இரு நாடுகள் செலுத்தும் கவனத்தையும் இப்பயணம் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்