​பாகிஸ்தான் பழங்குடியினப் பிரதேசத்துக்கு சீனா நிதியுதவி

நிலானி 2018-02-03 14:03:30
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பாகிஸ்தான் பழங்குடியினப் பிரதேசத்துக்கு சீனா நிதியுதவி

சீனாவின் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு உதவி நிதியம் ஐ.நா திட்டப் பணியகத்துடன் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபதில் 2ஆம் நாள் உடன்படிக்கை ஒன்றில் கையொப்பமிட்டது. இவ்வுடன்படிக்கையின்படி, பாகிஸ்தானின் பழங்குடியினப் பிரதேசம் மற்றும் பலூசிஸ்தான் மாநில மக்களின் மறுசீரமைப்புப் பணிக்கு ஆதரவளிக்க, சீனா ஐ.நா திட்டப் பணியகத்துக்கு 40லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவியை வழங்கும்.  

பாகிஸ்தான் பழங்குடியினப் பிரதேசத்துக்கு சீனா நிதியுதவி

சீனத் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு உதவி நிதியம் பாகிஸ்தானில் மேற்கொண்ட இரண்டாவது திட்டப்பணி இதுவாகும். அந்நாட்டின் பழங்குடியினப் பிரதேசத்தில் சுமார் 8100 குடும்பங்களின் மறுசீரமைப்புக்கு இது உதவியளிக்கும். மேலும், பலூசிஸ்தானில் இதன் மூலம், 375 பள்ளிகளுக்கு உரிய ஆசிரியர்கள் ஏற்பாடு செய்யப்படுவதுடன், வகுப்பறை சாமான்களும் வாங்கப்பட உள்ளன. 


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்