இந்தியாவின் அக்னி -1 ஏவுகணை ஏவுதல்
அக்னி-1 என்னும் திருத்தியமைக்கப்பட்ட எறிவிசை ஏவுகணை ஒன்றை 6ஆம் நாள் செவ்வாய்கிழமை சோதனை முறையில் ஏவியுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரம் அறிவித்தது.
இந்த ஏவுகணை கிழக்கு இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள கலாம் தீவின் ஒட்டுமொத்த ஆய்வு தளத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
அக்னி என்னும் எறிவிசை ஏவுகணை தொகுதியை இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பு ஆராய்ந்து தயாரித்து வருகின்றது. அக்னி -1 ரக ஏவுகணை 1000 கிலோகிராம் எடையுடைய அணு முனையை ஏற்றி, 700 கிலோமீட்டர் தொலைவு வரை செல்லக் கூடியது.