தில்லியில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புக் கலை நிகழ்ச்சி

மதியழகன் 2018-02-10 15:21:26
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தில்லியில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புக் கலை நிகழ்ச்சி

சீனப் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு, “2018 வசந்த விழாக் கொண்டாட்டம்”என்ற சிறப்புக் கலை நிகழ்ச்சி இந்தியாவின் புது தில்லியிலுள்ள என்.சி.யு.ஐ மையத்தில் நடைபெற்றது.

தில்லியில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்புக் கலை நிகழ்ச்சி

இந்தியாவுக்கான சீனத் தூதர் லோவ் சௌஹுய் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தியபோது, இந்நிகழ்ச்சியைக் கண்டுரசித்த இந்தியா மற்றும் பிற நாடுகளின் விருந்தினர்களுக்கு சீன வசந்த விழாவின் பழக்க வழக்கங்களையும் புதிய மாற்றங்களையும் அறிமுகம் செய்தார்.

வசந்த விழா, சீனாவில் மிக முக்கியத் திருவிழாவகும்.  சீன மக்கள் வசந்த விழாவைக் கொண்டாடும் வழக்கம், இந்தியாவில் தீபாவளி விழாவைப் போன்றது. சீன மக்கள்  பழைய வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றும் அதேசமயத்தில், தற்காலத்தில்  மூன்று புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  விடுமுறை நாட்களில் வெளியே சுற்றுலா செல்வது, கைப்பேசி மூலம் பணப் பரிசு அளிப்பது, பட்டாசுகளைக் குறைவாக வெடித்து தூய்மையான முறையில் விழாவை கொண்டாடுவது ஆகியவை அதிகமாக காணப்படுகின்றன என்று லோவ் சௌஹுய் கூறினார்.

புதிய ஆண்டு புதிய எதிர்பார்ப்புகளை கொண்டு வருகிறது. சீனா இந்தியாவுடன் இணைந்து, இரு தரப்புறவை முன்னெடுத்து புதிய ஆண்டில் புதிய முன்னேற்றம் பெற பாடுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்