புத்தாண்டை முன்னிட்டு சீனத் தூதரகத்தில் விருந்து கொண்டாட்டம்

மதியழகன் 2018-02-10 15:21:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நாய் புத்தாண்டை முன்னிட்டு சீனத் தூதரகத்தில் விருந்து கொண்டாட்டம்

நாய் புத்தாண்டை முன்னிட்டு, இந்தியாவிலுள்ள சீனத் தூதரகம், பிப்ரவரி 8ஆம் நாள் புது தில்லியில் வசந்த விழாவை வரவேற்கும் விருந்து நிகழ்ச்சியை நடத்தியது.

நாய் புத்தாண்டை முன்னிட்டு சீனத் தூதரகத்தில் விருந்து கொண்டாட்டம்

சீனத் தூதர் லோவ் சௌஹுய்,இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே, இந்திய நாடாளுமன்றம், அரசு, கட்சி, இந்தியாவுக்கான பல்வேறு நாடுகளின் தூதரக அலுவலர்கள் என மொத்தம் 400க்கும் அதிகமானோர் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நாய் புத்தாண்டை முன்னிட்டு சீனத் தூதரகத்தில் விருந்து கொண்டாட்டம்

சீனத் தூதர் லோவ் சௌஹுய் நிகழ்ச்சியில் உரைநிகழ்த்தியபோது

புதிய ஆண்டு என்பது ஒரு வெற்று புத்தகம் போன்றது. எழுது கோல், எமது கைகளில் இருக்கின்றது. தற்போது, சீன-இந்திய உறவின் புதிய அத்தியாயத்தை எழுதி கொண்டு இருக்கின்றோம். முன்னதாக, சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியேட்சு மற்றும் வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோர் வெற்றிகரமாக இந்தியப் பயணத்தை நிறைவேற்றியுள்ளனர் என்று தெரிவித்தார்.

புதிய ஆண்டில்,மேலதிக நேர்மறை சக்தி ஊட்டப்பட்டு,சீன-இந்திய உறவு புதிய நிலைக்கு செல்லும் என்றும்அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்