ராஜபக்சே கட்சி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி

நிலானி 2018-02-13 11:11:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ராஜபக்சே கட்சி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி

இலங்கை முன்னாள் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட தேர்தல் முடிவின்படி, 340 இடங்களில் 239-இல் ராஜபக்சேவின் கட்சி வெற்றியைப் பெற்றுள்ளது.

தற்போதைய ஆளும் கட்சியான தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி, 41 இடங்களிலும், சிறுபான்மை தமிழர்கள் சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி 34 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதே சமயம், அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவின் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி வெறும் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இத்தோல்வியைத் தொடர்ந்து, தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை சிறிசேனா சந்தித்தார். விரைவில் சில மாற்றங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்