இந்திய நடிகை ஸ்ரீதேவி காலமானார்

நிலானி 2018-02-26 16:47:15
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்திய நடிகை ஸ்ரீதேவி காலமானார்

இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கபூர், மாரடைப்பால் சனிக்கிழமை இரவு துபையில் காலமானார். அவருக்கு வயது 54. ஸ்ரீதேவியின் எதிர்பாராத மரணம் அவரது ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது. தலைமை அமைச்சர் முதல் பல்வேறு பிரபலங்கள் வரை, இவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தி தெரிவித்துள்ளனர்.

தனது உறவினர் ஒருவரின் திருமணத்துக்காக துபை சென்றிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். தமிழகத்தைச் சேர்ந்த இவர், தமிழ் படங்களைத் தவிர, பாலிவுட்டிலும் பெரும் பிரபலமாக இருந்தார். 4 வயதில் நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த கடைசிப் படமான மம் (Mom) 2017இல் வெளிவந்தது. திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்கிற்காக அவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்