நேபாள சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் சீனத் தயாரிப்பு

தேன்மொழி 2018-03-09 10:27:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாள சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் சீனத் தயாரிப்பு

7வது நேபாள சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியும் 2018ஆம் ஆண்டுக்கான சீன வணிகப் பொருட்காட்சியும் மார்ச் 8-ஆம் நாள் காலை நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டில் தொடங்கியது. அந்நாட்டுத் தலைமையமைச்சர் கே பி ஷர்மா ஓலி, நிதி அமைச்சர் யுவராஜ் கதிவாடா ஆகியோர் இத்துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.

நேபாள சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் சீனத் தயாரிப்பு

சீனாவின் ஃபூ ஜியன், திபெத், ஹுநான், ஷன்டொங், ஷென் ட்சென் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 60க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள், இப்பொருட்காட்சியில் தங்களது அரங்குகளை நிறுவியுள்ளன.

நேபாள சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் சீனத் தயாரிப்பு

சீன வணிக அமைச்சகத்தின் ஏற்பாட்டில், சீனத் தொழில் நிறுவனங்கள் நேபாள சர்வதேச வர்த்தகப் பொருட்காட்சியில் பங்கெடுத்த 5ஆவது முறையாகும். இயந்திர மின்னணு பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், கட்டிடப் பொருட்கள், மென்ரக தொழில் பொருட்கள், நெசவுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் முதலியவற்றை சீனத் தொழில் நிறுவனங்கள், காட்சிக்கு வைத்துள்ளன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்