பண்டாரி அம்மையார் நேபாள அரசுத் தலைவராக மீண்டும் தேர்வு

வாணி 2018-03-14 10:56:10
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நேபாள நாடாளுமன்றத்தில் 13ஆம் நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் நடப்பு அரசுத் தலைவர் பித்யா பண்டாரி சுமார் 40 ஆயிரம் வாக்குகளுடன் வெற்றி பெற்று மீண்டும் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மொத்தமுள்ள 862 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநில அவை உறுப்பினர்களும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர். வாக்களிக்கும் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாக்கு, 79 வாக்குகளுக்குச் சமமாகும். மாநில அவை உறுப்பினர் ஒருவரின் வாக்கு, 48 வாக்குகளுக்குச் சமமாகும்.

இவ்வாண்டு பண்டாரி அம்மையாருடைய  வயது 56. 2015ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் முதன்முதலாக நேபாள அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது 2ஆவது முறையாக இப்பதவியை அவர் ஏற்கவுள்ளார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்