ஏற்றுமதிக்கான இந்திய அரசின் மானியத்தின் மீது அமெரிக்கா வழக்கு தாக்கல்

வாணி 2018-03-15 15:11:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஏற்றுமதிக்கான இந்திய அரசு மானியத்தின் மீது உலக வர்த்தக அமைப்பிடம் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், இது பற்றி விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தியா தரப்பிடம் தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்கா 14ஆம் நாள் தெரிவித்தது.

இந்த மானியம் இந்தியாவின் ஏற்றுமதி தொழில் நிறுவனங்களுக்கு நியாயமற்ற போட்டி மேம்பாடுகளை வழங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு இந்தியா மிக மலிவான விலையில் உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் ஆக்கத் துறையின் நலன் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்திய அரசு வெளியிட்ட ஆவணங்களின்படி, ஆண்டுக்கு இந்தியாவின் தொழில் நிறுவனங்கள் அரசிடமிருந்து 700 கோடி அமெரிக்க டாலருக்கு அதிகமான சலுகையை பெறுகின்றது என்று தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்