சீன உதவியுடன் அமைக்கப்பட்ட நேபாளத்தின் காவல்துறை கழகம்

வான்மதி 2018-03-19 18:55:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன உதவியுடன் அமைக்கப்பட்ட நேபாளத்தின் காவல்துறை கழகம்

சீன உதவியுடன் அமைக்கப்பட்ட நேபாளத்தின் ஆயுதக் காவல்துறை கழகக் கட்டுமானத் திட்டப்பணி பயன்பாட்டுக்கு வரும் விழா 19ஆம் நாள் அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவில் நடைபெற்றது.

நேபாளத் தலைமை அமைச்சர், உள்துறை அமைச்சர், நேபாளத்துக்கான சீனத் தூதர், சீன ரயில்வே 14ஆவது குழுமத்தின்  தலைமை இயக்குநர் முதலியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

நேபாளத் தலைமை அமைச்சர் ஓலி உரை நிகழ்த்துகையில், இக்கழகத்தின் கட்டுமானத்தில் பங்கெடுத்த அனைத்து நிறுவனங்களுக்கும் நபர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், நேபாள-சீன உறவு எதிர்காலத்தில் மேலதிக முன்னேற்றம் அடைவதற்கான அடையாளமாக இத்திட்டப்பணி திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்