இந்தியாவில் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் நினைவு அஞ்சல் உறை வெளியீடு

நிலானி 2018-03-21 18:47:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இயற்பியல் துறையில் மிகப்பெரும் சாதனைகளைப் புரிந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் உள்ள அவருடைய வீட்டில் மார்ச் 14 ஆம் நாளன்று காலமானார். 

இயற்பியல் துறையில் குறிப்பாக கருந்துளை மற்றும் அது சார்ந்து பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங்கின் சாதனைகளை நினைவு கூரும் வகையில் அவர் இறந்த ஒரு வார காலத்திற்குள் இந்திய அஞ்சல் துறை மும்பை மாநகரில் சிறப்பு அஞ்சல் உறை ஒன்றை வெளியிட்டுள்ளது.

தன்னுடைய 22 ஆவது வயதில் இயக்கு நரம்பணு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்டீபன் ஹாக்கிங் அப்பொழுது முதல் சக்கர நாற்காலியின் உதவியுடனேயே இயங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய இழப்பு மிகுந்த மன வேதனை அளிப்பதாகத் தெரிவித்த இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி, இந்த உலகை மிகச் சிறந்த இடமாக மாற்றியமைத்ததில் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்றும், அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தது  நினைவுகூரத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்