சீனாவின் வர்த்தகக்குழு இந்தியாவில் பயணம் மேற்கொண்டது

கலைமகள் 2018-03-25 15:52:06
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வர்த்தகக்குழு இந்தியாவில் பயணம் மேற்கொண்டது

சீன-இந்திய பொருளாதார வர்த்தகத் தொடர்பை வலுப்படுத்தி, இருநாட்டு தொழில் நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பை முன்னேற்றி, இரு தரப்பு வர்த்தகத்தின் சரிசம வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், சீன வணிகத்துறை அமைச்சகத்தின் சீன வர்த்தக முன்னேற்றக்குழு 23 முதல் 27ஆம் நாள் வரை இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறது. மென்ரக தொழில்துறை மற்றும் நெசவுத்துறை, மருத்துவம், வேளாண் உற்பத்திப்பொருட்கள், எண்ணெய் மற்றும் வேதிப்பொருள், வணிக மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் சுமார் 30 பிரதிநிதிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சீனாவின் வர்த்தகக்குழு இந்தியாவில் பயணம் மேற்கொண்டது

மார்ச் 24ஆம் நாள் மாலை, சீன வணிகத்துறை அமைச்சகமும், இந்தியாவின் வணிக மற்றும் தொழில் துறை அமைச்சகமும் புதுதில்லியில் சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சிக்கான சிறப்பு விளம்பரக்கூட்டத்தையும் சீன-இந்திய வர்த்தக திட்டப்பணிகளின் கையொப்பமிடல் விழாவையும் கூட்டாக நடத்தின. இதில் இரு நாட்டுத் தொழில் நிறுவனங்கள் மொத்தமாக 101 வர்த்தக உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டுள்ளன. அதன் மொத்தத் தொகை 236 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டாலராகும். 

சீனாவின் வர்த்தகக்குழு இந்தியாவில் பயணம் மேற்கொண்டது


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்