ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

மதியழகன் 2018-04-05 14:36:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தேல்வி

இலங்கை நாடாளுமன்றத்தில் 4ஆம் நாள் நடத்தப்பட்ட வாகெடுப்பில், தலைமை அமைச்சர் ரணில் விக்கரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

புதன்கிழமை காலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் தொடங்கியது. இரவில் வாக்கெடுப்பு முடிவுக்கு வந்தது.

நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 பேரும் வாக்களித்தனர். 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இவ்வாண்டு மார்ச் திங்கள், சில எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து, இலங்கை தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்