நேபாள தலைமை அமைச்சரின் இந்திய பயணம் தொடக்கம்

மதியழகன் 2018-04-06 15:40:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தியாவில் 3 நாள் அரசுமுறை பயணமாக நேபாள தலைமை அமைச்சர் கே.பி.ஷர்மா ஒலி 6ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலையில் காட்மாண்டுவில் இருந்து புறப்பட்டார்.

இந்தியா சென்றடைந்த பிறகு, இந்திய தொழில் துறையினருடன் ஷர்மா ஒலி சந்திப்பு நடத்துகிறார். 7ஆம் நாள், இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோருடன் சந்திப்பு நடத்த உள்ளார். மேலும், அன்று, இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என்று நேபாள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேளாண்மை, வர்த்தகம், முதலீடு, அடிப்படை வசதி, நிலநடுக்கத்துக்குப் பிறகு மறுசீரமைப்பு, எல்லையை கடந்த சாலைக் கட்டுமானம், நாடு கடந்த குற்றவியல் நடவடிக்கை, பயங்கரவாதம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தரப்பும் விவாதிக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்