ஒடிசா தொடர்வண்டி விபத்துக்கு இந்திய ரயில்வே மன்னிப்பு

வாணி 2018-04-11 15:46:50
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஒடிசா மாநிலத்தில் அண்மையில் இயந்திரம் இல்லாத நிலையில் ஒரு தொடர்வண்டியின் 22 பயணப் பெட்டிகள் 12 கிலோமீட்டர் தூரம் பின் நோக்கி ஓடிய சம்பவம் தொடர்பாக இந்திய ரெயில்வே பொது மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.

தொடர்வண்டி சேவையின் உயர் தரத்தை நிலைநிறுத்த தொடர்ந்து முயற்சி செய்வோம் என்றும் அந்த அறிக்கையில் இந்திய ரயில்வே வாக்குறுதி அளித்தது.

இதுவரை இவ்விபத்துடன் தொடர்புடைய 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய ரயில்வே உலகில் மிகப் பெரிய இருப்புப்பாதை சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். நாடளவில் நாளொன்றுக்கு சுமார் 9000 பயணியர் தொடர்வண்டி மூலம் 2 கோடியே 30 இலட்சம் பயணிகள் பயணம் செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்