இந்தியாவின் 8ஆவது தடங்காட்டி செயற்கைக்கோள் ஏவு

வாணி 2018-04-12 16:35:29
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

தடங்காட்டி செயற்கைக்கோள் ஒன்றை வியாழக்கிழமை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக இந்தியா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த புவியிடங்காட்டி அமைப்புகளில் இது 8ஆவது செயற்கைக் கோளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி விண்வெளி அறிவியலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதற்கு முன்னதாக விண்ணில் செலுத்தப்பட்ட 7 செயற்கைக் கோள்களில் செயல் இழந்த ஒன்றுக்குப் பதிலாக இந்தச் செயற்கைக் கோள் இயங்கும். கடந்த ஆண்டு இந்தியா இதே போன்றதொரு முயற்சியை மேற்கொண்டது. ஆனால் அம்முயற்சி தோல்வியுற்றது.

இந்த புவியிடங்காட்டி அமைப்பு பொதுத் துறை மற்றும் ராணுவத் துறைகளில் பயன்படுத்தப்படும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்