உத்தர பிரதேசத்தில் கடும் காற்றில் 15 பேர் சாவு

வாணி 2018-04-13 16:07:41
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புயல் மழையையடுத்து ஏற்பட்ட கடும் காற்று காரணமாக உத்தரப் பிரதேசத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அலுவலர்கள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இரவில் பராஜ் பகுதியில் காற்று வேகம் மணிக்கு 130 கிலோமீட்டராக பதிவாகியுள்ளது என்று கூறப்பட்டது.

தாஜ் மஹாலின் அரச மற்றும் தெற்கு வாயில்களிலுள்ள முகலாய கால நினைவுச்சின்னமான தூண்களும் கடும் காற்றினால் சேதமடைந்துள்ளன.  இந்திய தொல்பொருள் ஆய்வு ஆணையம் இப்பாதிப்பை மதிப்பீடு செய்து கொண்டிருக்கின்றது. உலகின் 7ஆவது அதிசயமாக தாஜ் மஹால் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்