புதுதில்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கான சீன மொழி போட்டி

வான்மதி 2018-04-17 16:31:36
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கான சீன மொழி போட்டி

சீன மொழி பாலம் எனும் வெளிநாட்டு பல்கலைக்கழக மாணவர்களுக்கான 17ஆவது சீன மொழி போட்டியின் இந்திய பகுதி போட்டி 16ஆம் நாள் புதுதில்லியில் நடைபெற்றது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மும்பை பல்கலைக்கழகம், வேலூர் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட புகழ்பெற்ற உயர் கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கான சீன மொழி போட்டி

எழுத்துத் தேர்வு, பேச்சுப் போட்டி, கேள்வியும் பதிலும், கலை அரங்கேற்றம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தீவிரமாகப் போட்டியிட்டனர். இறுதியில் விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் மனோரஞ்சன் தலால் சாம்பியன் பட்டத்தையும் மும்பை பல்கலைக்கழகத்தின் மாணவர் மனோகர் குமார் இரண்டாவது இடத்தையும் பெற்றனர். அவர்கள் இந்தியாவின் சார்பில் சீனாவுக்கு வந்து, இந்த சீன மொழி போட்டியின் இறுதிச்சுற்றில் கலந்து கொள்ள உள்ளனர்.

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கான சீன மொழி போட்டி

பரிசு பெற்றவருக்கு இந்தியாவுக்கான சீனத் தூதர் லுவோ ட்சாவ் ஹுய் பரிசு கோப்பை வழங்கி உரை நிகழ்த்தினார். சீனா-இந்தியா இடையே தொடர்புகள் அதிகரித்து வருகிறது. இருநாட்டுறவின் எதிர்காலம் எதிர்பார்க்கத்தக்கது. சீன மொழியைக் கற்றுக் கொண்டால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்