இந்தியாவில் ரொக்க நாணயப் பற்றாக்குறை

வாணி 2018-04-18 10:44:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நாட்டின் சில பகுதிகளில் தோன்றிய ரொக்க நாணயப் பற்றாக்குறை தற்காலிகப் பிரச்சினை தான் என்றும்,  இதைச் சமாளிக்கும் வகையில் மத்திய அரசும் ரிசர்வு வங்கியும் ஒருங்கிணைந்து பணி புரிவதாகவும் இந்திய நிதி அமைச்சகம் 17ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தப் பிரச்சினை 3 நாட்களுக்குள் சீராகிவிடும் என்றும் இவ்வறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக, புது தில்லி, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல பிரதேசங்களில் ரொக்க நாணயப் பற்றாக்குறை நிலவுகின்றது. இதனால், தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் இதற்கு கடும் மனநிறைவின்மை தெரிவித்துள்ளனர். பல உயர் அதிகாரிகளும் இதற்குச் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுக்கள் சந்தையில் காணாமல் போய் இருக்கின்றன. இந்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்தியப் பிரதேசத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் 16ஆம் நாள் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்