சீன-இந்திய வர்த்தக ஒத்துழைப்புக்கு ஒளிமிக்க எதிர்காலம்

2018-04-23 14:29:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-இந்திய உறவில், சில சமயங்களில் சிக்கல் ஏற்பட்ட போதிலும், இரு தரப்புகள் மேற்கொண்ட முயற்சிகளால், தற்போது சீரான பரிமாற்றம் மீண்டும் காணப்பட்டுள்ளது.

இரு தரப்பு பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தி,  வர்த்தக சமநிலையை முன்னெடுக்கும் வகையில், சீன வணிக அமைச்சகத்தின் தலைமையிலான  பிரதிநிதிக் குழு ஒன்று இவ்வாண்டு மார்ச் திங்கள் இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில்,  236.8 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான 101 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தானாது குறிப்பிடத்தக்கது.

சீன-இந்திய வர்த்தக ஒத்துழைப்பின் எதிர்காலம் மீது சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தெற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் ரான்ஜியே நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது

சீனா, இந்தியா ஆகிய நாடுகள், 250 கோடி மக்கள் தொகை கொண்டுள்ள நாடுகளாகும். அவற்றின் சந்தை மிகவும் பெரியது. 10ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வர்த்தக தொகையைப் பார்க்கும்போது, இரு தரப்பு வர்த்த்க ஒத்துழைப்பின் உள்ளார்ந்த வாய்ப்புகளை போதுமாக வெளிக்காட்டவில்லை எனத் தெரிகிறது. எதிர்காலத்தில்,  சீன நிறுவனங்கள், இந்தியாவில் உள்கட்டமைப்பு, எரியாற்றல், பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட சந்தை வாய்ப்புகளை பெறும் அதேவேளையில், இந்திய நிறுவனங்கள், சீனாவில் வேளாண்மை, மருந்துப் பொருட்கள், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட துறைகளிலான  சந்தையில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் என்று குறிப்பிட்டார்..

பிரதேசத்தின் அமைதி, செழுமை மற்றும் நிலைப்புத்தன்மையைப் பேணிக்காக்க சீனாவும் இந்தியாவும் விரும்புகின்றன. மேலும், திறந்த நிலையிலான உலகப் பொருளாதார ஒழுங்குமுறையை உருவாக்கப் பாடுபடுகின்றன. உலகமயமாக்கத்தில் பெரும் அறைகூவல் தோன்றிய சூழலில், சீனாவும் இந்தியாவும் கையோடு கைகோர்த்து உலக வர்த்தக ஒழுங்குமுறையைப் பேணிக்காத்து, உலகமயமாக்கலை முன்னெடுப்பதில் மேலதிக பங்கினை ஆற்ற வேண்டும் என்று பேராசிரியர் ரான்ஜியேகருத்து தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்