இலங்கை அமைச்சரவை மாற்றம்

இலக்கியா 2018-05-02 17:06:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இலங்கை அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசுத் தலைவர் சிறிசேனா மே முதல் நாள் அறிவித்துள்ளார். அதனுடன் கடந்த சில திங்களாக இலங்கை சுதந்திரக் கட்சிக்கும், இலங்கை தேசிய ஒன்றிணைப்புக் கட்சிக்குமிடையே நீடித்து வந்த கொந்தளிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில், உயர் கல்வி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர், விளையாட்டுத் துறை அமைச்சர், பேரழிவு மேலாண்மை துறை அமைச்சர், தொடர வல்ல வளர்ச்சி, காட்டு உயிரினம் மற்றும் பிரதேச வளர்ச்சி துறை அமைச்சர் உட்பட, மொத்தம் 6 அமைச்சர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மே 2ஆம் நாள் இலங்கை அரசுத் தலைவரின் தலைமையகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்