இந்தியாவில் 82 விழுக்காடு வீடுகளுக்கு மின்னாற்றல் கிடைத்துள்ளது

வாணி 2018-05-02 18:55:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நாட்டிலுள்ள அனைத்து கிராமப்புறங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை அமைச்சர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்த நிலையில், தற்போது 82 விழுக்காட்டு வீடுகளுக்கு மின்னாற்றல் வினியோகிக்கப்பட்டுள்ளதாக எரியாற்றல் துறை உதவி அமைச்சர் ஆர்.கே. சிங் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்துக் குடும்பங்களின் மின்சார பயன்பாட்டிற்கு அரசு உத்தரவாதம் செய்யும். அதேவேளையில், வறுமை கோட்டிற்குக் கீழுள்ள வீடுகளுக்கும் மின்சாரம் அளித்து வருகின்றோம் என்று அவர் குறிப்பிட்டார்.

அதோடு நிறுத்தமில்லாமல் மின்சாரத்தை விநியோகப்பதற்காக அரசின் பல்வேறு வாரியங்களும் ஒருங்கிணைந்து பணி புரிவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்